ADDED : மே 07, 2024 11:12 PM
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் ஓய்வூதியர் மன்ற கூட்டம் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சிக்கந்தர் முன்னிலை வகித்தார்.பொருளாளர் செந்துாரான் வரவேற்றார். கூட்டத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் அறிவித்ததை அடுத்து மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கருவூலம் அலுவலகத்தில் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை பெறாதவர்கள் தற்போது பெற்றுக் கொள்ளலாம். ஓய்வூதியர்களுக்கு முழுமையாக பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணம் எடுப்பது, அனுப்புவது உள்ளிட்ட எந்தவொரு குறுந்தகவல் வராததால் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர்கள் லெட்சுமணன், பொதுவன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

