/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சர்வீஸ் ரோடு வாறுகாலில் 1 கி.மீ.,பிளாஸ்டிக் குப்பை போர்வை
/
பரமக்குடி சர்வீஸ் ரோடு வாறுகாலில் 1 கி.மீ.,பிளாஸ்டிக் குப்பை போர்வை
பரமக்குடி சர்வீஸ் ரோடு வாறுகாலில் 1 கி.மீ.,பிளாஸ்டிக் குப்பை போர்வை
பரமக்குடி சர்வீஸ் ரோடு வாறுகாலில் 1 கி.மீ.,பிளாஸ்டிக் குப்பை போர்வை
ADDED : மே 26, 2024 10:58 PM

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றங்கரையோர வாறுகாலில் 1 கி.மீ.,க்கு பிளாஸ்டிக் குப்பை போர்வையாக பரவியுள்ளதால் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பரமக்குடி நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. அரசு பல்வேறு வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சூழலில் கடைகளில் அதன் பயன்பாடு தொடர்கிறது.
மேலும் மக்களும் துணிப்பை மற்றும் சில்வர் துாக்குகள் என பயன்படுத்தாமல் உள்ளனர். இதனால் வாறுகால்களில் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் குவியல் பரவி நகரில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.
இச்சூழலில் பரமக்குடி தரைப்பாலம் துவங்கி நகராட்சி எல்லை முடியும் காக்கா தோப்பு வரை, 1 கி.மீ., க்கு மிகப்பெரிய வாறுகால் உள்ளது.
இது 6 அடி அகலம் மற்றும் 10 அடிக்கு மேல் பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒட்டுமொத்த வாறுகாலிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை தண்ணீர் செல்லும் பாதை தெரியாமல் போர்வையாக காணப்படுகிறது.
இதனால் கொசுத்தொல்லை ஒருபுறம் அதிகரிக்கும் சூழலில், நாள் முழுவதும் துர்நாற்றத்தில் மக்கள் தவிக்கின்றனர்.
மேலும் சர்வீஸ் ரோட்டில் செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் தவறி விழும் நிலையில் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.
ஆகவே இப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பையை ஒட்டுமொத்தமாக சுகாதாரத்துறை அகற்றுவதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

