/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.10 கோடி ரிபேட் பாக்கி
/
பரமக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.10 கோடி ரிபேட் பாக்கி
பரமக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.10 கோடி ரிபேட் பாக்கி
பரமக்குடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.10 கோடி ரிபேட் பாக்கி
ADDED : ஆக 01, 2024 10:42 PM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரிபேட் பாக்கி தொகை ரூ.10 கோடியை அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கைத்தறித்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.
சென்னையில் கைத்தறித் துறை இயக்குனர் சண்முகசுந்தரத்திடம் காங்., நெசவாளர் அணி மாநிலத் தலைவர் சுந்தரவேல், பொதுச் செயலாளர் கோதண்டராமன், துணைத் தலைவர் கதிரேசன் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தலின் போது 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையின் படி நெசவாளர்களுக்கு தனியாக வங்கி அமைக்கப்படும் என அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
பரமக்குடியில் செயல்படும் 82 கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு தேவைப்படும் நுால்களை கொள்முதல் செய்ய நுால் கோடவுன், சாய சாலை அமைத்து தர வேண்டும்.
மூலப்பொருள் கொள்முதல் செய்ய தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்.
பரமக்குடி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நிலுவையில் உள்ள ரிபேட் மானியம் ரூ.10 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு பதவி காலம் ஏப்.2023 முடிவுற்ற நிலையில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.
நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.