/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆற்றுப்பாலம் கட்ட ரூ.10 லட்சம் நிதி
/
ஆற்றுப்பாலம் கட்ட ரூ.10 லட்சம் நிதி
ADDED : ஜூலை 02, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி அருகே நம்புதாளையில் பல்லக்கு ஒலியுல்லா தெருவில் ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் நடந்து செல்ல முடியாத வகையில் சேதமடைந்தது. புதிய பாலம் கட்ட நம்புதாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுமதி வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து திருவாடானை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் பாண்டிசெல்வி பங்கேற்றனர்.