நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்களத்துார் வள்ளுவ காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு இளைஞர் மன்றம் சார் பில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு 18 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பெண்கள் திருவிளக்கு பூஜையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.