/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சம்பூர்ணடா அபியான் திட்டத்தில் 112 மாவட்டங்கள் தேர்வு
/
சம்பூர்ணடா அபியான் திட்டத்தில் 112 மாவட்டங்கள் தேர்வு
சம்பூர்ணடா அபியான் திட்டத்தில் 112 மாவட்டங்கள் தேர்வு
சம்பூர்ணடா அபியான் திட்டத்தில் 112 மாவட்டங்கள் தேர்வு
ADDED : ஜூலை 05, 2024 10:50 PM

திருவாடானை : மத்திய அரசின் சம்பூர்ணடா அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 112 மாவட்டங்கள் தேர்வு செய்யபட்டுள்ளதாக நிதி ஆயோக் இயக்குநர் ருபேன்சிங் பேசினார்.
திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சம்பூர்ணடா அபியான் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. இதில் டில்லியை சேர்ந்த மத்தியரசு நிதி ஆயோக் இயக்குநர் ருபேன்சிங் பேசியதாவது: இத் திட்டம் 2018ல் துவங்கபட்டுள்ளது. சமூக பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் மாவட்டங்களை தேர்ந்தெடுத்து முக்கிய வளர்ச்சி குறியீடுகள் வழங்கபட்டுள்ளது.
மத்திய, மாநில அரசால் 112 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கபட்டு முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதே நோக்கமாகும். மக்களின் ஆரோக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, சுகாதாரம், வேளாண்மையை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கம். இந்த சம்பூர்ணடா அபியான் திட்டத்தில் 40 குறியீடுகள் எடுத்து ஜூலை முதல் ஆரம்பித்து 100 சதவீதம் முன்னேற்றத்தை அடையவேண்டும் என்றார். இத்திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, தாசில்தார் அமர்நாத், ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார், பி.டி.ஓ. கணேசன், ஆரோக்கியமேரி சாராள், ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அய்யப்பன் பங்கேற்றனர்.