ADDED : ஜூலை 05, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை எஸ்.ஐ., சதீஷ் மற்றும் போலீசார் மது விலக்கு மற்றும் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருவாடானை அரசு மருத்துவமனை பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன் 34, 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
-–
