ADDED : மே 30, 2024 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி, - தொண்டி அருகே தீர்த்தான்டதானம் கண்மாயிலிருந்து இரு மான்கள் வெளியேறி கடற்கரை பகுதிக்கு வந்தது.
மான்களை பார்த்த நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் அதே இடத்தில் இரு மான்களும் பலியாயின. அப்பகுதி மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சென்று உடல் பரிசோதனைக்கு பின் புதைத்தனர்.