/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் விழுந்த 2 மீனவர்கள்2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
/
கடலில் விழுந்த 2 மீனவர்கள்2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
கடலில் விழுந்த 2 மீனவர்கள்2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
கடலில் விழுந்த 2 மீனவர்கள்2 மணி நேரத்திற்கு பின் மீட்பு
ADDED : ஆக 04, 2024 11:51 PM
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் கடலில் படகிலிருந்து, தவறி விழுந்து உயிருக்கு போராடிய இரண்டு மீனவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நம்புதாளையைச் சேர்ந்த மீனவர்கள் பரத், 20, ராமகிருஷ்ணன், 21. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நாட்டுப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையை விரித்த பரத், படகிலிருந்து தவறி விழுந்தார். ராமகிருஷ்ணன், அவரை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தார். இருவரும் கடலில் விழுந்து விட்டதால் நங்கூரம் இல்லாமல் இருந்த படகு, பலத்த காற்று வீசியதால் கரையை நோக்கி சென்றது.
அந்த படகு சரியாக நம்புதாளை கடற்கரையை நோக்கி வந்த போது, அங்கிருந்த மீனவர்கள் படகு மட்டும் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இரண்டு படகுகளில் மற்ற மீனவர்கள் கடலுக்குள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பரத், ராமகிருஷ்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்தனர்.
தொடர்ந்து இரு மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடியதால் இருவரும் சோர்வாக காணப்பட்டனர். அவர்களுக்கு தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.