/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் டூவீலர் திருடிய 2 பேர் கைது
/
ராமநாதபுரத்தில் டூவீலர் திருடிய 2 பேர் கைது
ADDED : ஏப் 04, 2024 03:48 AM

-ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் டூவீலர்கள் திருடிய இரு வாலிபர்களை பஜார் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே பாண்டியூர் வடக்குத் தெருவை சேர்ந்த மேகநாதன் மகன் அழகுசரவணன் 34. இவர் சிகில் ராஜவீதியில் தனியார் மருத்துவமனைக்கு டூவீலரில் வந்திருந்தார்.
மருத்துவமனையில் உறவினரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது டூவீலரை காணவில்லை. பஜார் போலீசில் அழகுசரவணன் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் டூவீலரை திருடிய மல்லிகை நகரை சேர்ந்த அசோக்குமார் மகன் வெங்கடேஷ் 28, சேதுபதிநகர் நாகராஜ் மகன் ஹரிபிரசாத் 21, ஆகிய இருவரையும் கைது செய்து டூவீலரை மீட்டு விசாரிக்கின்றனர்.

