/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆற்றில் மணல் திருடிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
/
ஆற்றில் மணல் திருடிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : ஏப் 06, 2024 04:07 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ராதானுார் மணிமுத்தாற்று பகுதியில் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராதானுார் வி.ஏ.ஓ., பாண்டியராஜன் கொடுத்த புகாரில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு, பரஞ்சோதி வாசல் பகுதியைச் சேர்ந்த பழனி மீது வழக்கு பதிந்துள்ளார்.
குலமாணிக்கம் கோட்டைக்கரையாறு பகுதியில் மணல் திருட்டு குறித்து, பகவதிமங்கலம் வி.ஏ.ஓ., பார்த்திபன் புகாரில், திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் டிராக்டரை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட, எஸ்.ஆர்.மணக்குடி அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்தனர்.

