/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி
/
2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி
ADDED : ஏப் 13, 2024 02:16 AM

ஆர்.எஸ்.மங்கலம்:உத்தரகோசமங்கை அருகே வித்தானுார் களரி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின், 31, தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷனில் போலீஸ்காரர். ஆர்.எஸ்.மங்கலத்தில் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றார். பின், திருவாடானை நோக்கி டூ - வீலரில் சென்றார்.
அப்போது எதிரே, திருவாடானை அருகே மேலையூரைச் சேர்ந்த தொழிலாளி பழனி, 39. அதே கிராமத்தைச் சேர்ந்த கலா, 35, என்பவருடன், டூ - வீலரில் வந்தார்.
மாலை 4:00 மணிக்கு மேல்பனையூர் விலக்கு சாலையில் இரு டூ - வீலர்களும் நேருக்கு நேர் மோதின. இதில், லெனின், பழனி இருவரும் சம்பவ இடத்தில் பலியாயினர். காயமடைந்த கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.

