/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை
/
அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை
அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை
அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : மார் 22, 2024 04:41 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தீர்ப்பு வழங்கினார்.
ராமநாதபுரம் அரசு புறநகர் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிபவர் சரவணன் 42. இவர் 2019 மே 3ல் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருச்சி செல்ல அரசு பஸ்சை இரவு 9:55 மணிக்கு ஓட்டி வந்தார். அப்போது அண்ணாதுரை சிலை அருகே வந்த போது ஆர்.எஸ்.மடை, சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் 31, என்பவர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்தார்.
இதையடுத்து கேணிக்கரை போலீசார் விக்னேஷ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி குமரகுரு பொது சொத்தினை சேதப்படுத்திய விக்னேஷ்வரனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.----------

