/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
202 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
202 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஆக 13, 2024 12:18 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 202 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., முகமது சைபுல் தலைமையிலான போலீசார் மளிகை மற்றும் பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 202 கிலோ எடையுள்ள 1304 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த தொண்டி முகிழ்த்தகம் பகுதியைச் சேர்ந்த ராஜாஜி 37, ஆர்.எஸ்.மங்கலம் முகமது கோயா தெரு முகமது இலியாஸ் 46, தெய்வம்மாள் தெரு முத்துராஜா 56, ஆகிய மூவரை கைது செய்தனர்.