/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகன விபத்துக்களில் 215 பேர் உயிரிழப்பு
/
வாகன விபத்துக்களில் 215 பேர் உயிரிழப்பு
ADDED : ஆக 07, 2024 06:27 AM
ராமநாதபுரம்,: -ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024 ஜூன் வரை நடந்த வாகன விபத்துக்களில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் வரை 681 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 18 பேர் பலத்த காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 469 பேர் சிறு காயங்கள் அடைந்துள்ளனர். 6 விபத்துக்களில் எந்த காயங்களும் இல்லை. 199 விபத்துக்களில் 215 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது கூறியதாவது:
ஆண்டு தோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஜன., ஜூலை, ஆக., மாதங்களில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இதனை குறைக்க விழிப்புணர்வு நவடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.