/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹி.ம.க.,வின் 22 விநாயகர் சிலைகள்
/
ஹி.ம.க.,வின் 22 விநாயகர் சிலைகள்
ADDED : செப் 06, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து ஊர்வலம் நடத்த உள்ளனர். ராமேஸ்வரத்தில் ராமர் தீர்த்தம், திட்டக்குடி, காமராஜர் நகர், கிழக்கு தெரு, மேட்டு தெரு, பர்வதம், காந்திநகர் உள்ளிட்ட 22 இடங்களில் செப்.7ல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை, பூஜைகள் செய்ய உள்ளனர்.
நேற்று ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்திற்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளை ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன், ஹிந்து புரட்சி முன்னணி மாநில செயலாளர் ஹரிதாஸ், நிர்வாகிகள் பார்வையிட்டனர்.