/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சியில் 23 பேர் ஆப்சென்ட்
/
திருவாடானையில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சியில் 23 பேர் ஆப்சென்ட்
திருவாடானையில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சியில் 23 பேர் ஆப்சென்ட்
திருவாடானையில் இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சியில் 23 பேர் ஆப்சென்ட்
ADDED : ஏப் 08, 2024 11:51 PM
திருவாடானை : திருவாடானையில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் 23 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
லோக்சபா தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாள்வது மற்றும் ஓட்டுப்பதிவு நடைமுறைகள் குறித்தான பயிற்சி வகுப்பு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஓட்டுச் சாவடி அலுவலர் நிலை 1, நிலை 2, நிலை 3 ஆகிய பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கபட்டுள்ளனர்.
இம்மையங்களில் பணியாற்றுபவர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் லோக்சபா திருவாடானை சட்டசபை தொகுதியில் சின்னக் கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்ச் 24 ல் நடந்தது. நேற்று திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாம் கட்ட பயிற்சியில் 1666 பேர் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 23 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மூன்றாம் கட்டமாக பயிற்சி ஏப்.16 ல் நடைபெறும். திருவாடானை சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மாரிச்செல்வி, திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.