/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுச்சாவடிகளில் 230 கண்காணிப்பு கேமராக்கள்
/
ஓட்டுச்சாவடிகளில் 230 கண்காணிப்பு கேமராக்கள்
ADDED : ஏப் 18, 2024 05:14 AM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஓட்டுச்சாவடிகளில் 230 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில் மேல்பனையூர், கீழ்பனையூர், சின்னக்கீரமங்கலம் உள்ளிட்ட 59 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
இவ்விடங்களில் தேர்தலின்போது வீண் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார், துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் என கணக்கெடுக்கபட்டு 230 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
இதன் வாயிலாக, ஓட்டுச்சாவடிகள் கண்காணிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

