/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 56 வேட்பு மனுக்களில் 28 தள்ளுபடி
/
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 56 வேட்பு மனுக்களில் 28 தள்ளுபடி
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 56 வேட்பு மனுக்களில் 28 தள்ளுபடி
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 56 வேட்பு மனுக்களில் 28 தள்ளுபடி
ADDED : மார் 28, 2024 10:55 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நேற்று வேட்பு மனு பரிசீலனையில் 56 மனுக்களில் மாற்று மனு, உரிய ஆவணங்கள் இல்லாதது என28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஏப்.19ல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில்மார்ச் 20 முதல் 27 வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.அரசியல் கட்சியினர், சுயேச்சைகள், டம்மிவேட்பாளர் என 41 பேர் 56 மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நேற்று ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வேட்பு மனு பரிசீலனைநடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார்.தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் முன்னிலை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பா.ஜ., கூட்டணிஅ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தி.மு.க., கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிட்டிங் எம்.பி., நவாஸ்கனி, அ.தி.மு.க.,வில் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி டாக்டர் சந்திரபிரபா, சுயேச்சைகள் என28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.
மாற்று மனுக்கள், உரிய ஆணவங்கள் இல்லாதது என 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.நாளை (மார்ச் 30ல்) வேட்பு மனு வாபஸ் நடக்கிறது. அன்றே வேட்பாளர் இறுதிப்பட்டியல், சின்னம் ஒதுக்கீடு நடைபெற உள்ளது.

