/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
/
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
ADDED : பிப் 25, 2025 07:14 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம் கேணிக்கரை எஸ்.ஐ., தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சக்கரக்கோட்டை டாஸ்மாக் கடைப்பகுதியில் உள்ள கருவேலங்காட்டுக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது டூவீலரில் நின்றுகொண்டிருந்த 3 பேர் தப்பி ஓடினர். இவர்களை போலீசார் பிடித்து டூவீலரை சோதனையிட்டதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சேகர் மகன் அசோக்குமார் 31, சக்கரக்கோட்டை முருகேசன் மகன் சிலம்பரசன் 27, பரமக்குடி அருகே வயலுார் குளத்துார் தெற்கு தெரு காளீஸ்வரன் மகன் ராஜ்குமார் 27, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
திருவாடானை: திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயில் நாடகமேடை பின்புறம் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. சுந்தர மூர்த்தி சென்று கடம்பாகுடி அஜித்குமார் 27, மகாலிங்கபுரம் பெரியசாமி 33, ஆகிய இருவரையும் கைது செய்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.