ADDED : மார் 08, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:பரமக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே விக்கிரபாண்டிபுரம், வலசை கிராமத்தை சேர்ந்தவர் உத்திரகுமார், 35. இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
மார்ச் 5 இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகில் சகோதரி வீட்டிற்கு டூ - வீலரில் சென்ற போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடினர்.
இந்நிலையில், பரமக்குடி, வைகை நகரில் வசிக்கும் மணக்குடியைச் சேர்ந்த பேபிகரண், 23, மஞ்சள்பட்டணம் பகுதியில் வசிக்கும் அக்கிரமேசியைச் சேர்ந்த தீனதயாளன் 23, பரமக்குடி பங்களா ரோடு அப்துல்கலாம், 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முன் விரோதத்தில் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.