/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர் கொலையில் மேலும் 3 பேர் கைது
/
ஆசிரியர் கொலையில் மேலும் 3 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2024 04:37 AM
கமுதி: கமுதி அருகே கே.பாப்பாங்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கமுதி செட்டியார் தெருவை சேர்ந்தவர் கண்ணன் 51. இவர் கே.பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு டூவீலரில் சென்றார்.
பாப்பாங்குளம் விலக்கு ரோட்டில் கண்ணனை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
போலீஸ் விசரணையில் கே.வேப்பங்குளம் முத்து அரியப்பனுக்கும், கண்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது தெரிய வந்தது.
கண்ணன் டூவீலரில் வருவது குறித்து தகவல் தெரிவித்த இலந்தைகுளம் பாலமுருகன் 22, போலீசார் 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர்.
மேலும் கண்ணன் கொலை வழக்கில் கே.வேப்பங்குளம் முத்து அரியப்பன் 41, இவரது தம்பி முருகன் 30, முத்தலாங்குளம் வினோத்குமார் 23, போலீசார் கைது செய்தனர்.