ADDED : மார் 28, 2024 10:54 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வைகை நகர், அரியசாமி நகர் பகுதியில் மாடுகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் வைகை நகரை சேர்ந்த குணசேகரன், கூரி, அரியசாமி நகரை சேர்ந்த ரைகானா ஆகியோரது பசு மாடுகளை திருடிச் சென்றனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். இதில் கூரி என்பவர் டி.என்.55 பி.எப்., 9652 என்ற மினி சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றி சென்றதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
வாகன பதிவு எண்ணை வைத்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாடுகளை திருடிய தேவிப்பட்டினம் வடக்குத் தெரு சூர்யா 23, இளையான்குடி ஏழு வளைவு தெரு செய்யது முகமது மகன் தீம்சுல்தான் 45, பேராவூர் மேற்கு தெரு முத்துசாமி மகன் பிரகாஷ் 28, ஆகியோரை கைது செய்து மாடு திருடியதற்கு பயன்படுத்திய மினி சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

