/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
ADDED : மார் 22, 2024 04:31 AM
ராமநாதபுரம்: -கமுதி போலீஸ் ஸ்டேஷனில் கொலை மிரட்டல் விடுத்து ஆயுதங்களுடன் மிரட்டி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்ற விக்னேஷ்வரன் 26.
கமுதி அருகே மரைக்குளம் மதன்குமார் என்ற பாலமுருகன் 28, மற்றும் அபிராமம் போலீஸ் ஸ்டேஷனில் முதுகுளத்துார் தாலுகா மூலக்கரைப்பட்டி மாலைக்கண்ணன் 26. இவர் மீது பேரையூர், அவனியாபுரம், முதுகுளத்துார், திருச்சுழி, நாகமலைபுதுகோட்டை, காரியாபட்டி, பார்த்திபனுாரில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் கலெக்டர் விஷ்ணுசந்திரனுக்கு பரிந்துரை செய்தார். இதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.----------

