/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளஸ் 1 தமிழ் தேர்வில் 311 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 தமிழ் தேர்வில் 311 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 06, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 311 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 160 பள்ளிகளைச் சேர்ந்த 14,585 மாணவர்கள், கடந்த ஆண்டு தோல்வி அடைந்த 121 பேர், தனித்தேர்வர்கள் 156 பேர் 64 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று முதல் நாள் தமிழ் பாடத்திற்கான தேர்வில் ரெகுலர் மாணவர்கள் 232 பேர், தனித்தேர்வர்கள் 21, கடந்த ஆண்டு தோல்வி அடைந்தவர்களில் 58 பேர் என 311 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.