/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இன்று முதல் ஸ்டிரைக் இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்துகள் பறிமுதல்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இன்று முதல் ஸ்டிரைக் இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்துகள் பறிமுதல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இன்று முதல் ஸ்டிரைக் இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்துகள் பறிமுதல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இன்று முதல் ஸ்டிரைக் இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்துகள் பறிமுதல்
ADDED : பிப் 24, 2025 02:47 AM

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து இன்று (பிப்., 24) முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தயிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
பிப்.22ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய- இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர்.
பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை படகில் இழுத்து வைத்துக் கொண்டு ராமேஸ்வரம் கரைக்கு திரும்பினார்கள்.
32 மீனவர்கள் கைது
அப்போது ஐந்து படகுகளை இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்து, அதில் இருந்த மீனவர்கள் சில்வர்ஸ்டார் 35, நாகராஜ் 55, ராஜேந்திரன் 62, வின்சென்ட் 30, இன்பம் 35, இளங்கோ 31, ஸ்டாலின் 26, பிராங்கிளின் 35, யோகேஸ்வரன் 28, சதீஷ்குமார் 24, ராஜ்குமார் 26, செங்கோல் 48, ராபின் 20, ஸ்டார்வின் 24, மணிகண்டன் 50, செல்லையா 51, கொலம்பஸ் 37, நிதேஷ் 30, ஆரோக்கிய கிரிம்மீஸ் 49, ஸ்டீபன் 32, சரத்குமார் 30, ரமேஷ் 36, ஜெரோன் 32, முனீஸ்வரன் 21, கேம்பில் 38, வியாகுலம் 42, ராஜா 48, அந்தோணிராஜ் 35, சந்தியாகு 24, ஜெயபிரகாஷ் 43, ரீகன் 46, பாண்டி 50, ஆகியோரை கைது செய்து மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின் மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.
மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
இந்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இலங்கை கடற்படை கைது செய்த 32 மீனவர்கள் மற்றும் ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி இன்று முதல் (பிப்.24) மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.
மருந்துகள் பறிமுதல்
மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடலோரத்தில் சுங்கத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடத்தல்காரர்கள் சிலர் 7 பெட்டிகளை நாட்டுப்படகில் ஏற்ற முயன்றனர். உடனே அவர்களை சுங்கத்துறையினர் பிடிக்க முயன்ற போது, அவர்கள் பார்சலை போட்டுவிட்டு தப்பினர். சுங்கத்துறையினர் பார்சலை சோதனையிட்டதில் 6000 ஆயிரம் தோல் அலர்ஜி மருந்து பாக்கெட்டுகள் இருந்ததன. இவற்றை படகில் இலங்கைக்கு கடத்தயிருந்தது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ. 3 லட்சம்.
தட்டுப்பாடால் கடத்தல் அதிகரிப்பு
இலங்கையில் மருந்து, சமையல் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அத்தியவாசியப்பொருட்ள்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் அச்சமின்றி அந்த பொருட்களை கடத்தி செல்வதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

