/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் 348 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
/
பரமக்குடியில் 348 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
பரமக்குடியில் 348 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
பரமக்குடியில் 348 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்
ADDED : ஜூன் 23, 2024 09:46 AM
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 348 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய இரண்டு ரேஷன் கடை விற்பனையாளர்கள் தலை மறைவாகினர்.
பரமக்குடி பகுதியில் ரேஷன் மண்ணெண்ணெய் கள்ள சந்தையில் லிட்டர் ரூ.120 க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியானது. சிவில் சப்ளை தாசில்தார் கீதா, வட்ட பொறியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உழவர் சந்தை பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மளிகை மற்றும் பெட்டிக் கடையில் 20 லி., 10 லி., 5 லி., கேன்களில் 348 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டு ரேஷன் பங்கில் ஒப்படைக்கப்பட்டது. எமனேஸ்வரம் ரேஷன் பங்க் விற்பனையாளர் ராமமூர்த்தி, பரமக்குடி உழவர் சந்தை பங்க் விற்பனையாளர் முத்துகணேஷ் மீது ராமநாதபுரம் உணவு பொருட்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் இரண்டு விற்பனையாளர்களும் தலைமறைவாகி விட்டனர். தாசில்தார் கீதா, ''ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.