ADDED : ஏப் 30, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
ராமேஸ்வரம் எம்.கே.நகரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு பதுங்கி இருந்த 4 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் ஒண்டிவீரன் நகர் காளிசாமி 23, முரளி 22, கிழகாடு பழனி 55, திட்டக்குடி சுந்தரபாண்டி 35, எனத் தெரிந்தது. இவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து போதை பிரியர்களிடம் விற்க திட்டமிட்டுள்ளனர். 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

