/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை 4 பேர் கைது: இருவர் ஓட்டம்
/
ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை 4 பேர் கைது: இருவர் ஓட்டம்
ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை 4 பேர் கைது: இருவர் ஓட்டம்
ராமநாதபுரத்தில் மணல் கொள்ளை 4 பேர் கைது: இருவர் ஓட்டம்
ADDED : ஆக 05, 2024 07:13 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேணிக்கரை போலீஸ் எஸ்.ஐ., தினேஷ்பாபு மற்றும் போலீசார் கீழக்கரை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைசாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மணல் அள்ளி வந்த 5 லாரிகளை மடக்கி பிடித்தனர். அதில் முறையான உரிமம் இல்லாமலும், நடை பயண சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக மணல் கடத்தி வருவது தெரியவந்தது.
இதில் சத்திரக்குடி நரியனேந்தல் கணசேன் மகன் குமார் 42, சூரங்கோட்டை காலனி கோவிந்தன் மகன் ஆனந்த் 32, மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் கோணாபட்டி சேகர் மகன் ரகுபதி 38, ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை முருகேசன் மகன் வெங்கடேஷ்குமார் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் முரளி தப்பி ஓடினார். மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.மடை கார்மேகம் மகன் கார்த்திக் மணல் அள்ள சொல்லி அள்ளி வந்ததாக தெரிவித்தனர்.
இதன் காரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், முரளியை தேடி வருகின்றனர். 5 லாரிகளையும், அதிலிருந்த 30 யூனிட் மணலுடன் 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.