/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி அருகே 400 ஜெலட்டின் டெட்டனேட்டர்கள் பறிமுதல் 2 பேர் மீது வழக்கு
/
தொண்டி அருகே 400 ஜெலட்டின் டெட்டனேட்டர்கள் பறிமுதல் 2 பேர் மீது வழக்கு
தொண்டி அருகே 400 ஜெலட்டின் டெட்டனேட்டர்கள் பறிமுதல் 2 பேர் மீது வழக்கு
தொண்டி அருகே 400 ஜெலட்டின் டெட்டனேட்டர்கள் பறிமுதல் 2 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 29, 2024 02:06 AM

திருவாடானை, ஆக.29-
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 ஜெலட்டின் குச்சிகள், 400 டெட்டனேட்டர்களை ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கைப்பற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலை பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் கடத்தி வருவது அடிக்கடி நடக்கிறது.
கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக இச்செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து டூவீலரில் இரண்டு பேர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயர்களுடன் ஓரியூரை நோக்கி சென்றனர்.
வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கும் போது மூடை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறின. அவற்றை சேகரிக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கமாக ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் இருவரும் டூவீலரில் தப்பி ஓடினர்.
எஸ்.பி.பட்டினம் போலீசார் அனைத்தையும் சேகரித்து மூடையை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அதில் 400 ஜெலட்டின்கள், 400 டெட்டனேட்டர்கள், 2 கிலோ ஒயர் இருந்தது. கைப்பற்றப்பட்ட இடத்தில் ஒரு அலைபேசி கிடந்தது.
அதை கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்ததில் தொண்டி புதுக்குடி செந்தில் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அவரையும் மற்றும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.