/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க புதிதாக 44 போலீசார் நியமனம்
/
திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க புதிதாக 44 போலீசார் நியமனம்
திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க புதிதாக 44 போலீசார் நியமனம்
திருவாடானையில் மணல் கடத்தலை தடுக்க புதிதாக 44 போலீசார் நியமனம்
ADDED : ஏப் 06, 2024 03:53 AM
திருவாடானை : திருவாடானை சப்-டிவிசனில் 44 போலீசார் புதிதாக நியமிக்கபட்டுள்ளனர். மணல் கடத்தலை தடுக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என திருவாடானை டி.எஸ்.பி.நிரேஷ் கூறினார்.
அவர் கூறியதாவது: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸ் பற்றாக்குறையாக இருந்தது.
தற்போது 44 போலீசார் புதிதாக நியமிக்கபட்டுள்ளனர். இப் பகுதியில் உள்ள ஆறு மற்றும் நீர் நிலைப்பகுதிகளில் டிராக்டர், டூவீலர் என மணல் கடத்த பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கடும் வெப்பத்ததால் கண்மாய்களில் நீர் மட்டம் குறைவதால், மணல் கடத்தல் தொடரும் வாய்ப்பு உள்ளது. ஆற்றுப்படுக்கைகளில் மணல் கடத்தல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவிப்போர்களின் முகவரிகள் ரகசியம் காக்கப்படும்.
முறையாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். இதே போல் இந்த சப்-டிவிசனில் ஒரு வாரத்திற்குள் கஞ்சா மற்றும் போதை புகையிலை விற்ற 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்கா, புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ்ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

