/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் மாநில சிலம்பம் 548 பேர் பங்கேற்றனர்
/
சாயல்குடியில் மாநில சிலம்பம் 548 பேர் பங்கேற்றனர்
ADDED : மே 22, 2024 07:56 AM
சாயல்குடி : சாயல்குடியில் நாகு பாண்டி சிலம்பக் குழு சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் ரோஜா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன் துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன், ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல், தேவா, மதிவேந்தன், சமூக அறக்கட்டளை நிறுவனர் ஸ்டெல்லா, வழிவிட்டான், புள்ளியியலாளர் ராமபூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, துாத்துக்குடி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 548 சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். வயதின் அடிப்படையில் தனித்தனியாக ஆண், பெண் இருவருக்கும் போட்டிகள் நடந்தன.
சிலம்பாட்ட மாநில நடுவர் கடுகு சந்தை முத்துமாரி உட்பட பலர் நடுவர்களாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகு பாண்டி சேர்வைக்காரர் சிலம்ப அகாடமி நிறுவனர் அம்சவர்தன் நவநீதகிருஷ்ணன் செய்திருந்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

