/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆசிரியர் நியமன தேர்வில் 58 பேர் 'ஆப்சென்ட்'
/
ஆசிரியர் நியமன தேர்வில் 58 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூலை 22, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஆசிரியர் நியமனத் தேர்வில் 488 பேர் பங்கேற்றனர். 28 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், எழுத்து தேர்வையும் எழுதினால் மட்டுமே பணி நியமனம் பெறமுடியும். இதன் அடிப்படையில் நேற்று தமிழகத்தில் ஆசிரியர் நியமனத் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 516 பேருக்கு ஆசிரியர் நியமன தேர்வு இருமையங்களில் நடந்தது. இதில் 28 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 488 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வில் வெற்றிபெறுபவர்கள் பணி அமர்த்தபட உள்ளனர் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.