/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் செக் போஸ்டில் ரூ.6 லட்சம் பறக்கும்படை பறிமுதல்
/
பார்த்திபனுார் செக் போஸ்டில் ரூ.6 லட்சம் பறக்கும்படை பறிமுதல்
பார்த்திபனுார் செக் போஸ்டில் ரூ.6 லட்சம் பறக்கும்படை பறிமுதல்
பார்த்திபனுார் செக் போஸ்டில் ரூ.6 லட்சம் பறக்கும்படை பறிமுதல்
ADDED : மார் 22, 2024 04:31 AM

பரமக்குடி: -பரமக்குடி அருகே பார்த்திபனுார் செக் போஸ்டில் நிலையான கண்காணிப்பு தேர்தல் குழுவினர் ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூர் செக் போஸ்டில் நிலையான கண்காணிப்பு தேர்தல் குழு அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சந்திரசேகர் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த அசாருதீன் டூவீலரில் சென்றார். அவரிடம் சோதனையிட்ட போது ஆவணமின்றி ரூ.6 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரிந்தது. அதனை கைப்பற்றி பரமக்குடி தலைமையிடத்து துணை தாசில்தார் சீதாலட்சுமி வசம் ஒப்படைத்தனர்.