/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
ADDED : மார் 09, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இளைஞர்கள்கஞ்சா பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் ரோந்து சென்றார்.
அப்போது கஞ்சா வைத்திருந்த திருவாடானை மணிகண்டி பகுதியைச் சேர்ந்த அரசு மகன் சதீஷ்குமார் 20, தொண்டி காந்தி நகர் ஆறுமுகம் மகன் பாண்டித்துரை 20, சப்பாணியேந்தல் ராஜேந்திரன் மகன் பிரபு 22, வல்லமடை ஆரோக்கியசாமி மகன் மகிம் 22, ஆர்.எஸ்.மங்கலம் அன்னை தெரு சக்திகுமார் மகன் தனுஷ் குமார் 21, ராசு மகன் ஹரிஹரசுதன் 22, ஆகிய 6 பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள்பறிமுதல் செய்யப்பட்டது.