/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயியை வெட்டியவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை
/
விவசாயியை வெட்டியவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை
ADDED : மே 28, 2024 06:22 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
தொண்டி அருகே சேமவயல் கண்மாயில் மராமத்துப்பணிகள் 2019 செப்., மாதம் நடந்தது. அப்போது கண்மாயில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்களை மணல் அள்ளும் இயந்திரத்தால் அப்புறப்படுத்தினர். குறுமிளாங்குடியை சேர்ந்த சேகர் 60, நிலத்தில் இருந்த காட்டு கருவேலமரங்களையும் அகற்றியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சேகர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டித்த தொண்டி மல்லனுாரை சேர்ந்த விவசாயி மணிமுத்துவை அரிவாளால் சேகர் வெட்டினார். மணிமுத்து புகாரில் தொண்டி போலீசார் சேகரை கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன்ராம் விவசாயி சேகருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்தும், பணம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க தீர்ப்பளித்தார்.