/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விழாக்காலத்தில் மணக்கும் மல்லிகை வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.600
/
விழாக்காலத்தில் மணக்கும் மல்லிகை வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.600
விழாக்காலத்தில் மணக்கும் மல்லிகை வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.600
விழாக்காலத்தில் மணக்கும் மல்லிகை வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.600
ADDED : ஆக 27, 2024 05:57 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சி மடம் மற்றும் வெளியூர்களில் இருந்தும் மல்லிகை வரத்துள்ளதால் விழாக்காலத்திலும் விலை உயர்வின்றி கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், மண்டபம், அதை சுற்றியுள்ள இடங்களில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிருந்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.
மல்லிகை பூ பங்குனி, சித்திரை சீசன் காலத்தில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ. 2000 வரை விலை உயர்ந்துவிடும்.
தற்போது மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஆவணி முகூர்த்த தினங்கள், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் இருந்த போதும், அதிக விலை உயராமல் கிலோ ரூ.500 முதல் ரூ.600க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.