/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
14 நாட்களில் 61 தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசு மவுனம்: காங்., கண்டனம்

ADDED : ஜூலை 02, 2024 06:10 AM

ராமேஸ்வரம் : மத்திய அரசின் அலட்சியத்தால் 14 நாட்களில் தமிழக மீனவர்கள் 61 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதற்கு இந்திய மீனவர் காங்., கண்டனம் தெரிவித்தது.
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது: மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வந்த நாள் முதல் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி சித்திரவதை செய்கின்றனர். கடந்த 14 நாட்களில் ராமேஸ்வரம், நம்புதாளை, நாகை, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 நாட்டுப்படகு, 6 விசைப்படகை இலங்கை கடற்படை சிறைபிடித்து 61 மீனவர்களை கைது செய்தது.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்தும், மீன்பிடிக்க செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். 2014 முதல் பிரதமராக மோடி வந்த பின் தமிழக மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காணாத மத்திய அரசின் அலட்சியப் போக்கை கண்டிக்கிறோம்.
தற்போதைய மைனாரிட்டி மத்திய அரசின் பலவீனத்தால் இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை நசுக்குகிறது. பிரதமர் மோடி தேர்தலில் மீனவருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, சிறையில் வாடும் மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.