/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரிவாள், வாளுடன் மிரட்டிய 7 பேர் கைது
/
அரிவாள், வாளுடன் மிரட்டிய 7 பேர் கைது
ADDED : மார் 23, 2024 05:35 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அரிவாள், வாளுடன் மிரட்டியதாக 7 பேரை உச்சிப்புளி போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் பெருங்குளம் பகுதியில் நதிப்பாலம் பகுதியில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் இளைஞர்கள் மிரட்டல் விடுப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷிடம் மனு கொடுத்தனர்.
இதன் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்குளம் சுந்தரராஜன் மகன் ஜெயராஜ் 24, புவனேஸ்வரன் மகன் கேதீஸ்வரன் 23, காந்தன் மகன் முகிலன் 22, முனீஸ்வரன் மகன் அஜய் என்ற அசோக் 20, ரவி மகன் உதயக்கண்ணன் 19, மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரை கைது செய்து, வாள், அரிவாளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

