/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
ADDED : மார் 29, 2024 12:11 AM
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 20ல் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரு படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று அம்மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்த 7 மீனவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து அவர்களை விடுதலை செய்தது. மேலும் 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் எல்லை தாண்டி வந்து கைதானால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. விடுதலையான மீனவர்களை கொழும்பு அருகே முகாமில் போலீசார் தங்க வைத்தனர். இவர்கள் ஒரு சிலநாட்களில் விமானத்தில் சென்னை வர உள்ளனர்.

