/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 6 மாதம் சிறை
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 6 மாதம் சிறை
ADDED : செப் 05, 2024 07:47 PM

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து ஆக., 26ல் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கிங்சன் 38, மெக்கான்ஸ் 34, ராஜ் 48, இன்னாசி ராஜா 48, சசிகுமார் 45, மாரியப்பன் 54, அந்தோணியார் அடிமை 64, முனியராஜ் 23, ஆகியோரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து மன்னார் மாவட்டம் வவுனியா சிறையில் அடைத்தனர். ஒன்பது நாட்கள் சிறையில் வாடிய மீனவர்களை நேற்று மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது. கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது மீனவர்களின் உறவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அபராதம் இந்திய மதிப்பில் தலா ரூ.14 ஆயிரம் வீதம் 8 பேருக்கும் ரூ.1.12 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தி மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் தெரிவித்தார்.