/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.20 லட்சம் நிலம் மோசடி இருவர் மீது வழக்குப்பதிவு
/
போலி ஆவணம் தயாரித்து ரூ.20 லட்சம் நிலம் மோசடி இருவர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணம் தயாரித்து ரூ.20 லட்சம் நிலம் மோசடி இருவர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணம் தயாரித்து ரூ.20 லட்சம் நிலம் மோசடி இருவர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 29, 2024 02:07 AM
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த முகமது ஜக்காரியா மகள் முகமது முனீரா 40. இவரது பாட்டி முகமது முகைதீன் பாத்திமா. இவர் தனக்கு சொந்தமான காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள நிலத்தில் 28 சென்ட் நிலத்திற்கு கீழக்கரையை சேர்ந்த செய்யது அபுபக்கர் மகன் செய்யது அமீர் அலி என்பவரை பவர் ஏஜன்டாக நியமித்து 2013 ல் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 2015 செப்.5ல் முகமது முகைதீன் பாத்திமா உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். பவர் பத்திரம் உடனடியாக ரத்து ஆகிவிடும். இதனால் முகைதீன் பாத்திமா உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து 2015 செப்.7 ல் கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்த பாகிமா ஹூசைனா என்பவருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை செய்யது அமீர் அலி கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரையம் செய்துள்ளார்.இதுகுறித்து முகமது முனீரா எஸ்.பி., சந்தீஷிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செய்யது அமீர் அலி, பாகிமா ஹூசைனா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

