/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியர் மீது வழக்கு
/
மாணவிக்கு தொல்லை ஆசிரியர் மீது வழக்கு
ADDED : ஏப் 07, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவிக்கு தாவரவியல் பாட ஆசிரியர் விஜய ராம்பாபு பாலியல் தொல்லை அளித்ததாக, பள்ளி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்டனர்.
அதில் தான் தவறு செய்யவில்லை என மறுத்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் புகாரில் குழந்தைகள் நல அமைப்பு விசாரித்ததில் அவர் பாலியல் தொல்லை தந்தது உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து ஆசிரியர் விஜயராம்பாபு மீது போக்சோ பிரிவில் , ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

