/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி அருகே கடல்நீரை உறிஞ்சிய மேகக்கூட்டம்
/
தொண்டி அருகே கடல்நீரை உறிஞ்சிய மேகக்கூட்டம்
ADDED : மார் 03, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி ; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் சில நாட்களாக துாறல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையில் புதுப்பட்டினம் கடலில் மேகங்கள் தாழ்வாக இருந்தது. அப்போது கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்பட்டது. இந்த அரிய காட்சியை அப்பகுதி மீனவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
மீனவர்கள் கூறியதாவது: கடல் காற்று வெப்பமாக இருக்கும் போது நீர்த்தாரைகள் எனப்படும் இந்நிகழ்வு ஏற்படும். பொதுவாக பருவநிலை மாறும்போது இதுபோன்றும் நடக்கும். வெளிநாடுகளில் இந்நிகழ்வு அடிக்கடி நடக்கும். தொண்டியில் இதுவே முதல் முறை என்றனர்.