ADDED : ஆக 01, 2024 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி சத்திரம் தெருவை சேர்ந்தவர் பாலுலட்சுமி 35. நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பூஜை அறையில் ஆறு அடி நீள நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
திருவாடானை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கருப்பையா தலைமையிலான வீரர்கள் சென்று பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.