ADDED : செப் 17, 2024 04:22 AM

திருவாடானை : திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டையில் இருந்து கீழக்கோட்டைக்கு தரைப்பாலம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டையில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து கீழக்கோட்டை வரை தார் ரோடு அமைக்கப்பட்டு அந்த ரோடு தேவகோட்டை ஓரியூர் இணைப்பு ரோடாக உள்ளது. சிறுமலைக்கோட்டையில் இருந்து தொண்டி, தேவகோட்டை செல்ல வேண்டுமென்றால் இந்த சாலையில் தான் பயணம் செய்ய வேண்டும்.
இரு கிராமங்களின் குறுக்கே விருசுழி ஆற்றின் கிளை செல்கிறது. ஆற்றை கடக்கும் வகையில் தரைபாலம் அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கபட்ட இந்த தரைப்பாலம், தற்போது கற்கள் பெயர்ந்து மண் சாலையாக மாறியுள்ளது.
இதனால் மழைக் காலங்களில் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். தரைப்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.