/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.70 கோடி போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளி தொடர்பு
/
ரூ.70 கோடி போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளி தொடர்பு
ரூ.70 கோடி போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளி தொடர்பு
ரூ.70 கோடி போதை பொருள் கடத்தலில் முக்கிய புள்ளி தொடர்பு
ADDED : ஜூலை 30, 2024 11:22 PM

ராமநாதபுரம்:சென்னை, கிளாம்பாக்கத்தில் ஜூலை 29ல் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர். இதில், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைத்தலைவர் செய்யது இபுராகிமும் ஒருவர்.
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்த இவர் பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். துவக்கத்தில் முஸ்லிம் இயக்கங்களில் இருந்தார். பின், தே.மு.தி.க.,வில் விஜயகாந்த் மன்ற மாவட்ட செயலராக இருந்தார்.
கடந்த, 2014ல் தி.மு.க.,வில் இணைந்து சிறுபான்மை பிரிவு ராமநாதபுரம் நகர செயலரானார். அதன் பின், அப்பிரிவு மாவட்ட துணை தலைவரானார். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியில் முக்கிய பிரமுகர்களுடன் இவர் எடுத்த போட்டோக்கள் தற்போது பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கீழக்கரை, ஏர்வாடி, உச்சிப்புளி, மண்டபம், பாம்பன், நம்புதாளை, தொண்டி கடலோரப் பகுதியில் இருந்து கள்ளத்தனமாக படகில் போதை பொருள்கள் கடத்திச் செல்வது தடையின்றி நடக்கிறது.
தற்போது சிக்கிய, 70 கோடி போதைப்பொருள் கடத்தலுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கிய புள்ளிகள் குறித்தும், கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மத்திய உளவுத்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக விசாரிக்கின்றனர். தொடர் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என, போலீசார் கூறினர்.