/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊருணியில் குளித்த சிறுமி மூழ்கி பலி
/
ஊருணியில் குளித்த சிறுமி மூழ்கி பலி
ADDED : ஏப் 30, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி- கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ்குமார் -- உமா. இவர்கள் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் வசிக்கின்றனர். இத்தம்பதி மகள் ரோஷிகா 5, யூ.கே.ஜி., படித்தார். கோடை விடுமுறைக்காக கண்ணார்பட்டி உறவினர் வீட்டுக்கு சிறுமி வந்துள்ளார்.
ஊருணிக்கு உறவினருடன் ரோஷிகா குளிக்க சென்றார். ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வீரர்கள் ரோஷிகாவை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரோஷிகா இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.