/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கலில் பூட்டப்பட்ட புறக்காவல் நிலையம்
/
சிக்கலில் பூட்டப்பட்ட புறக்காவல் நிலையம்
ADDED : ஜூலை 10, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல் ; சிக்கல் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை ஒழுங்குபடுத்தவும் நகரில் நிலவும் குற்றச் செயல்களை கண்டறிந்து ரோந்து செல்வதற்காகவும் புறக்காவல் நிலையம் கடந்த ஏப்., மாதம் திறக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான நேரங்களில் போலீசார் இன்றி பூட்டியே புறக்காவல் நிலையம் உள்ளது. எனவே நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், அத்தியாவசிய தேவையாக உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.