/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருளில் மூழ்கும் தேசிய நெடுஞ்சாலை
/
இருளில் மூழ்கும் தேசிய நெடுஞ்சாலை
ADDED : மே 09, 2024 09:59 PM

திருவாடானை: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் தினமும் ஏராளமான பஸ், லாரிகள், கார், கனரக வாகனங்கள் இதன் வழியாக செல்கின்றன. இந்த ரோட்டை அகலபடுத்தி பல ஆண்டுகள் ஆகியும் சென்டர் மீடியன்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை.
ரோட்டோரங்களில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளும் எரியாமல் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாசாரிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கருமொழி செக்போஸ்ட் அருகே இருட்டாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மின் விளக்குகளை எரியச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.